கீழ செக்காரக்குடியில் வ.உ.சி. நற்பணி மன்றம் சார்பில் 18ம் ஆண்டு மாபெரும் மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம், கீழ கீழச்செக்காரக்குடி பெருமாள்கோவில் வ.உ.சி. திடலில் வ.உ.சி. நற்பணி மன்றம் சார்பில் 18ம் ஆண்டு மாபெரும் மாட்டுவண்டி பந்தயம் இன்று நடைபெற்றது. பெரிய மாட்டு வண்டி போட்டிகளை முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ராமலட்சுமி ஐயம்பெருமாள் துவக்கி வைத்தார். சிறிய மாட்டு வண்டி போட்டிகளை முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் லெட்சுமணபெருமாள் துவக்கி வைத்தார்.
பூஞ்சிட்டு மாட்டுவண்டி போட்டிகளை தட்டபாறை உதவி காவல் ஆய்வாளர் துவக்கி வைத்தார். போட்டிகளில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல ஜோடி மாடுகள் போட்டியில் கலந்து கொண்டு சீறிப் பாய்ந்தன. இதில், பெரிய மாட்டுவண்டி எல்கை பந்தயத்திற்கு 8 மைல் தூரமும், சிறிய மாட்டுவண்டி எல்கை பந்தயத்திற்கு 6 மைல் தூரமும், பூஞ்சிட்டு மாட்டு வண்டிகள் பந்தயத்திற்கு 5 மைல் தூரமும் போட்டியாக நிர்ணயிக்கப்பட்டது.
பெரிய மாட்டு வண்டி போட்டியில் முதல் பரிசாக ரூ.25ஆயிரம், சிறிய மாட்டு வண்டி போட்டியில் முதல் பரிசாக ரூ.20ஆயிரம், மற்றும் பூஞ்சிட்டு மாட்டு வண்டி போட்டிக்கு முதல்பரிசாக ரூ.15ஆயிரம் வழங்கப்பட்டது. மேலும், போட்டியில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர் மற்றும் ஓட்டி வந்த சாரதிகளுக்கு பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது. போட்டிக்கான ஏற்பாடுகளை வ.உ.சி. நற்பணி மன்றம், மற்றும் கீழச்செக்காரக்குடி ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.


