பாளையங்கோட்டை சைவ சபையில் தமிழ் முழக்கப்பேரவை 172 வது நிகழ்ச்சி நடந்தது. தமிழ் முழக்க பேரரவை அமைப்பாளர் தேசிய தேசிய நல்லாசிரியர் முனைவர் செல்லப்பா தலைமை வகித்தார். செயலர் மு.அ.நசீர், உலக தமிழ்சங்கத்தினை சேர்ந்த பாப்பையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ் முழக்கப் பேரவை இணைச்செயலர் இரவிச்சந்திரன் வரவேற்று பேசினார். ஆறுமுக நாவலர் பற்றி பேராசிரியர் பே. சங்கரலிங்கமும், திருவாசகமும், ஜி.யு.போப் பற்றி மருத்துவர் ஐயப்பன் மகாலிங்கமும் பேசினார்கள். புலவர் கந்தக்குமாரின் நலம் தரும் கோயில்கள் நூல் குறிதது அறிமுக உரையை எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு பேசினார். தமிழ் முழக்கப்பேரரவை பொருளாளர் சண்முகவேலன் நன்றி கூறினார். இந்த நிகழ்ச்சியில் முனைவர் சுதாகர், எழுத்தாளர்கள் திவான், சண்முகநாதன், சிற்பி பாமா, தளவாய், முத்துசாமி, நூலகர் முத்துக்கிருஷ்ணன் , முனைவர் முருகன் சைவ சபை துணைத் தலைவர் சைவ நெறி காந்தி , கண்ணன் , கா.சு. பிள்ளை பேரன் மீ. சுப்பிரமணியன் , திருவாசகச் செம்மல் முத்தையா பிள்ளை , ஐ.ஓ. பி. கந்தசாமி பிள்ளை ( ப.நி ) நல்லாசிரியர் வை. இராமசாமி சாந்தி நகர் காவலர் குடியிருப்பு நல சங்கத்தின் தலைவர் சண்முகசுந்தரம் , இரயில்வே நாகமணி ( ப.நி. ) ஆன்மீக சொற்பொழிவாளர் கவிஞர் முருக இளங்கோ, பேராசிரியர் மகாலட்சுமி , ஆறுமுகம் , மேனாள் துணை ஆட்சியர் தியாகராஜன் , மேனாள் ஆட்சியர் செல்லப்பா , டாக்டர் செல்லப்பா , சித்த மருத்துவக் கல்லூரி இருளப்பன் கோபாலகிருஷ்ணன் , நெடுஞ்சாலை முருகேசன் , பொறியாளர் செந்தில்ராஜ் , ரெட்டியார்பட்டி சோமசுந்தரம் , மீனாட்சி நாதன் , மேனாள் தலைமை ஆசிரியர் தங்கையா,உள்பட பலர் கலந்துகொண்டனர்


