தாமிரபரணியை சீர்செய்ய நம் தாமிரபரணி சட்ட ஆலாசகர் சுடலைமணி தலைமையில் தாமிரபரணிஆர்வலர்கள் விரிவான அறிக்கை ஒன்றை தயார் செய்து நெல்லை எம்.பி. ராபர்ட் புரூஸ் அவர்களிடம் கொடுத்தனர்.
தாமிரபரணியை சுத்தப்படுத்தி சாக்கடை கலக்காத நதியாக மாற்றவேண்டும் என்று எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு மதுரை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் நீதியரசர்கள் ஜி.ஆர். சுவாமிநாதன், புகழேந்தி ஆகியோர் தாமிரபரணிக்கு நேரடியாக விசிட் செய்து நதியை காப்பாற்ற பல்வேறு உத்தரவுகள் பிரபித்து நடவடிக்கை எடுத்தனர். இதற்கிடையில் நெல்லை எம்.பி. ராபர்ட் புரூஸ் மத்திய அரசின் மூலம் நதியை காப்பாற்ற வேண்டிய நடவடிக்கை எடுத்து வருகிறார். தாமிரபரணி ஆர்வலர்களிடம் இதற்கான விரிவான அறிக்கையை கேட்டு வருகிறார். இந்த நிலையில் நம் தாமிரபரணி சட்ட ஆலாசகர் சுடலைமணி தலைமையில் வீரபுத்திரன், கூடல் அரசன் கொண்ட குழுவினர் விரிவான அறிக்கை ஒன்றை தயார் செய்தனர். இந்த அறிக்கையில் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கும்பல்கர் சுவர் போல தாமிரபரணியின் இருகரையில் 60 கிலோ மீட்டருக்கு சுவர் அமைத்தும், சாக்கடை இல்லா நதியாக மாற்ற எகிப்தில் உள்ளது போன்ற சாக்கடை சுத்தகரிப்பு ஆலை அமைக்க வேண்டும் என்பது உள்பட பல திட்டங்கள் அடங்கிய அறிக்கை ஒன்றை தயார் செய்தார்கள். இந்த அறிக்கையை நெல்லை எம்.பி ராபர்ட் புருஸ் அவர்களிடம் நம் தாமிரபரணி சட்ட ஆலோசகர் சுடலைமணி வழங்கினர். அவருடன் தாமிரபரணி ஆர்வலர்கள் கூடல் அரசன், வீரபுத்திரன், ஓய்வு பெற்ற ஆசிரியை பிரேமலதா, தமிழ் சான்றோர் பேரரவை மற்றும ரயில்வே ஆலோசனை குழு உறுப்பினர் வழக்கறிஞர் சுதர்சன் , ஆரோக்கியராஜ் உள்பட பலர் உடன் இருந்தனர்.
நாளை 3 ந்தேதி மதுரை உயர்நீதி மன்றத்தில் தாமிரபரணி வழக்கு விசாரனைக்கு வர உள்ளது. இந்த வழக்கில் நெல்லை எம்.பி ராபர்ட் புரூஸ் நேரில் ஆஜர் ஆக உள்ளார். அவர் தாமிரபரணியை சுத்தப்படுத்துவதற்கான விரிவான அறிக்கை ஒன்றை உயர்நீதி மன்றத்தி தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.


