கோவில்பட்டியில் வானமே எல்லை என்ற தலைப்பில் வானமே எல்லை என்ற தலைப்பில் இளைஞர்களுக்கான இலவச தன்முனைப்பு பயிற்சி முகாம் இன்று நடைபெற்றது.
வருங்கால இளம் தலைமுறையினர், இளைஞர்கள்- இளைஞிகள், கல்லூரி மாணவ மாணவிகள் தன்னம்பிக்கையுடன் செயல்படுவதற்கும், சுயதொழில் தொடங்கி முன்னேற்றம் அடைவதற்கும் ஏற்ற வகையில் அதற்கான வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும் என்பதற்காக தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள சௌபாக்கியா திருமண மண்டபத்தில் இளைஞர்கள் ஒருங்கிணைப்பு குழு மற்றும் ஜெயா கேட்டரிங் கல்லூரி சார்பில் வானமே எல்லை என்ற தலைப்பில் இளைஞர்களுக்கான இலவச தன்முனைப்பு பயிற்சி முகாம் இன்று நடைபெற்றது.
நீங்களும் பெரிய தொழிலதிபராகலாம் என்ற தலைப்பில் இதயம் நல்லெண்ணெய் நிறுவனத்தின் சேர்மன் முத்து மாணவர்களுக்கு தொழில் தொடங்குவது பற்றியும், அதில் வரக்கூடிய சவால்கள் அதனை எதிர்கொள்வது எப்படி வெற்றி பெறுவது என்பது குறித்து எடுத்துரைத்தார்.. அதைப் போன்று தன்னம்பிக்கையுடன் செயல்பாடுகள் எந்த வகையில் இருக்க வேண்டும் என்பதனை ஊக்குவிக்கும் வகையில் பேச்சாளர் கவிதா ஜவகர் பெரிதினும் பெரிது கேள் என்ற தலைப்பில் உரையாற்றினார்.
கோவில்பட்டி கம்பன் கழகத்தின் செயலாளர் சரவணன் செல்வன் வாழ்த்துரை வழங்கினார். ரோட்டரி சங்க மாவட்ட விருதுகள் பிரிவு தலைவர் விநாயக ரமேஷ்,கோவில்பட்டி ரோட்டரி சங்கத்தின் தலைவர் தாமோதரக்கண்ணன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர். இதில் கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் இளைஞர்கள் திரளாக கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
இதற்கான ஏற்பாடுகளை ஜெயா கேட்டரிங் கல்லூரி, ஹோட்டல் சரவண பவன் உரிமையாளரும், முன்னாள் மாநில எம்ஜிஆர் இளைஞர் அணி துணைச் செயலாளருமான சீனி ராஜ், முன்னாள் வழக்கறிஞர் பிரிவு மாவட்ட செயலாளரும் கோவில்பட்டி தொகுதி இளைஞர்கள் ஒருங்கிணைப்பு குழு தலைவருமான வழக்கறிஞர் சிவபெருமாள், கோவில்பட்டி தொகுதி இளைஞர்கள் ஒருங்கிணைப்பு குழு செயலாளர் கோமதிநாயகம்,, துணைச் செயலாளர் காசி பாண்டியன் ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.


