வல்லநாட்டில் காசநோய் இல்லா தமிழ்நாடு 100 நாள் பிரச்சார பணிகளை சென்னை நலவாழ்வு குழும இணை இயக்குனர் கிருஷ்ண லீலா ஆய்வு செய்தார்.
தமிழகம் முழுக்க காசநோய் இல்லா தமிழ்நாடு 100 நாள் பிரச்சாரம் டிசம்பர் 7ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. அதன் அடிப்படையில், காசநோய் ஒழிப்பு திட்ட பணிகளை சென்னை தேசிய நல வாழ்வு குழும இணை இயக்குனர் டாக்டர்.கிருஷ்ண லீலா இன்று (31.12.2024) வல்லநாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் அ. கிருஷ்ண ஜோதி, கண்காணிப்பாளர் இசக்கிமுத்து, உதவியாளர் ரமேஷ்வேல், முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் அ.அப்துல் ரஹீம் ஹீரா, முதுநிலை காசநோய் ஆய்வுக் கூட மேற்பார்வையாளர் இசக்கி மகாராஜன், கிராம சுகாதார செவிலியர்கள் மற்றும் சுகாதாரத் துறை பணியாளர்கள் ஆகியோர்கள் உடன் கலந்து கொண்டனர்


