ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி நதியின் கரையோரத்தில் அமைந்துள்ள புனித சந்தியாகப்பர் கோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி 25 ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.
இயேசுவின் 12 சீடர்களின் ஒருவரான புனித சந்தியாகப்பருக்கு ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி நதிக்கரையில் 415 ஆண்டுகளுக்கு முன்பு கோயில் கட்டப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் ஜீலை 16ம்தேதி முதல் 25தேதி வரை நடைபெறும் இத்திருவிழாவின் தொடக்க நிகழ்ச்சியாக காலை 5.30மணிக்கும் முதலாவது திருப்பலியும் 7மணிக்கு ஊர்பொதுமக்களுக்காகவும் மீனவ மக்களுகாகவும் பங்குதந்தை மரியவளன் தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது. மாலை 4 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் புனித சதியாகப்பரின் சொருபம் குருசு கோவிலிருந்து கிறிஸ்துவ கீதங்கள், இசைவாத்தியங்கள், வாணவேடிக்கை முழங்கபக்தர்கள் கொடியேந்தி முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. மாலை 6மணிக்கு ஊர்வலம் கோவிலை வந்து அடைந்தது. பின்னர் 6.45மணிக்கு கொடிகள் மந்திரிக்கப்பட்டு பங்கு தந்தை எட்வர்ட் செல்வராஜ் தலைமையில் வாண வேடிக்கை முழங்க பக்தர்களின் கரகோஷத்துடன் கொடியேற்றப்பட்டது. இரவு 7 மணிக்கு இடிந்தகரை பங்குதந்தை பிரதீப் தலைமையில் மறையுரையும் நற்கருனை ஆராதனையும் நடந்தது. திருவிழாநாட்களில் தினமும் காலை 5.30 மணிக்கு 6.30 மணிக்கு திருப்பலியும் மாலை 6.30 மணிக்கு திருயாத்திரை திருப்பலியும் நற்கருனை ஆராதனையும் நடக்கிறது.
ஜூலை 22ம்தேதி மதியம் 12மணிக்கு பங்கு தந்தை மரியவளன் தலைமையில் அன்னதானம் நடைபெறுகிறது. ஜூலை 25&ம்தேதி 10ம்திருவிழாவை முன்னிட்டு அதிகாலை 4.30 மணி, காலை 5. மணி, காலை 6 மணி, காலை 7 மணிக்கு கூட்டு திருப்பலியாக மேதகு ஆயர் இவோன் அம்ரோஸ் தலைமையில் நடைபெறுகிறது. காலை 10.15 மணிக்கு தோர்பவனியாக ஆலயத்திருத்தேரில் மாதாவும், சப்பரத்தில் புனித சந்தியாகப்பரும் வீதியுலா வருகின்றனர். 12 மணிக்கு சிறப்பு திருபயனிகளுக்காக திருபலியும் நடக்கிறது.
ஏற்பாடுகளை குருசு கோவில் பங்குதந்தை மரியவளன் மற்றும் அருட்சகோதரிகள், பங்கு பேரவையினர், ஊர்நலக் கமிட்டியினர், இறைமக்கள் செய்து வருகின்றனர்.
பெரியதாழை, உவரி, மணப்பாடு, ஆலந்தலை, படுக்கப்பத்து, இடிந்தகரை, தூத்துக்குடி, அமலிபுரம், கடலோர மீனவமக்கள் அதிகளவில் கலந்து கொண்டனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பிசகாயஜோஸ் தலைமையில் போலீசார் செய்திருந்தனர்.
====


