தூத்துக்குடி வ.உ.சி. கல்வியியல் கல்லூரியில் 1990-1991 ஆம் கல்வியாண்டில் பயின்ற மாணவர்கள் சந்தித்து தங்களது மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
தூத்துக்குடி வ.உ.சி. கல்வியியல் கல்லூரியில் 1990-1991ஆம் கல்வியாண்டில் இளங்கல்வியியல் (B.Ed) பயின்ற மாணவர்கள் மற்றும் அவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்கள் சுமார் 33 வருடங்களுக்குப் பிறகு நேற்று கல்லூரி பொன்விழா அரங்கில் ஒன்று கூடி தங்களுடைய கல்லூரிக் கால பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர்.
மாணவர்கள் தங்களுடைய மலரும் நினைவுகளில், கல்லூரி தங்களை கற்றல் கற்பித்தலோடு விழுமியங்கள் சார்ந்த கல்வியையும் கொடுத்து செம்மைப்படுத்தியதாகக் கூறினர். ஆகையால் தான் தாங்கள் சிறந்த ஆசிரியர்களாகவும், பல்வேறு முக்கிய அரசு மற்றும் அரசு சாரா பதவிகளையும், பொறுப்புகளையும் வகித்து சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்தனர்.
இத்தகைய தங்களது முன்னேற்றத்திற்குக் காரணமான வ.உ.சி.கல்வியியல் கல்லூரியை நிறுவிய குலபதி ஏ.பி.சி.வீரபாகு அய்யாவுக்கு தங்களது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர்.
நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக இக்கல்லூரியில் பயிலும் பொருளாதாரத்தில் பின்தங்கிய கல்வியில் சிறந்த மாணவர்களுக்கு உதவும் பொருட்டு கல்லூரி நிறுவனர் குலபதி ஏ.பி.சி.வீரபாகு பெயரில் கல்வி உதவித் தொகை வழங்குவதற்கும், கல்லூரியின் பழைய மாணவர்கள் சங்கத்தை வலுப்படுத்துவதற்கும் பழைய மாணவர்களால் இக்கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டது. கல்லூரியின் முதல்வர் த.கனகராஜ் ஏற்புரை வழங்கினார்கள்.


