தூத்துக்குடி பாரதியார் வித்யாலயம் மேல்நிலைப் பள்ளியில் கணித மேதை ராமானுஜன் பிறந்த தினத்தை முன்னிட்டு தேசிய கணித தினம் கொண்டாடப்பட்டது.
கணித மேதை சீனிவாச ராமானுஜனை கவுரவிக்கும் வகையில், அவரது பிறந்தநாளான டிசம்பர் 22-ம் தேதி தேசிய கணித தினமாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, தூத்துக்குடி பாரதியார் வித்யாலயம் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற தேசிய கணித தின விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் தட்சிணாமூர்த்தி தலைமை வகித்து ராமானுஜரின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
கணித பயிற்சி ஆசிரியை பெனிட்டா பூரண பிரசன்னா ராமானுஜரின் வாழ்க்கை, அவரின் கணித கண்டுபிடிப்புகள், 1729 என்ற எண்ணின் சிறப்புகள் குறித்து விளக்கி கூறினார். அதனை தொடர்ந்து மாணவ, மாணவிகளுக்கு கணித வினாடி வினா போட்டிகள் நடைபெற்றன. அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் ஆசிரியர்கள், பயிற்சி ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். பயிற்சி ஆசிரியை நிஷா நப்ரின் நன்றி கூறினார்.


