கோவில்பட்டியில் இருந்து ஓட்டபிடாரம் ஊராட்சி ஒன்றியம் வெள்ளாரம் கிராமத்திற்கு அரசு பேருந்து சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டபிடாரம் ஊராட்சி ஒன்றியம் வெள்ளாரம் கிராமத்தில் சுமார் 1200 க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள மக்கள் வேலை, கல்வி, நீதிமன்றம் உள்ளிட்ட தேவைகளுக்காக தூத்துக்குடி, கோவில்பட்டி, விளாத்திகுளம் பகுதிகளுக்கு தினசரி சென்று வருகின்றனர். எனவே வெள்ளாரம் கிராமத்திற்கு அரசு பேருந்துகளை இயக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில், ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம், வெள்ளாரம் கிராமத்தில் கோவில்பட்டி – எம்.வெங்கடாசலபுரம் வரை வந்து கொண்டிருந்த அரசு பேருந்தை பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று வெள்ளாரம் வரை செல்வதற்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த பேருந்து சேவையை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில் ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் காசிவிஸ்வநாதன் ஓட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் ரமேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


