தூத்துக்குடியில் ஆட்சிமொழிச் சட்ட வாரம் விழிப்புணர்வு பேரணியை அமைச்சர் பி.கீதா ஜீவன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் இயற்றப்பட்ட 27.12.1956-ம் நாளை நினைவுகூறும் வகையில் ஆண்டுதோறும் ஆட்சிமொழிச் சட்ட வாரம் கொண்டாடப்பட வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் தூத்துக்குடியில் ஆட்சிமொழிச் சட்ட வாரம் விழிப்புணர்வு பேரணியை பழைய மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன், மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தலைமையில் இன்று கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில், கல்லூரி மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.


