கோவில்பட்டியில் ஊதியம் வழங்க வலியுறுத்தி நகராட்சி அலுவலகம் முன்பு ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சியில் பணியாற்றி வரக்கூடிய ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு தற்போது வரை ஊதியம் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. ஊதியம் வழங்கப்படவில்லை என்பதால் தங்களால் தங்களது வீட்டு வாடகை கொடுக்க முடியவில்லை, வாங்கிய கடன்களை அடைக்க முடியவில்லை.
ஆகையால் தங்களது ஊதியத்தை விரைந்து வழங்கும்படி கோவில்பட்டி நகராட்சி அலுவலகம் முன்பு ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் ஊதியம் வழங்க கோரி கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தங்களது கோரிக்கை மனுவினையும் நகராட்சி அலுவலகத்தில் வழங்கினர். ஒப்பந்ததாரர் மூலமாக விரைவில் ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அதிகாரிகள் உறுதி அளித்ததை தொடர்ந்து ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டனர்.


