வல்லநாடு சிவன் கோயிலில் உழவாரப்பணி நடந்தது.
சைவ சித்தாந்த சபை சார்பில் ஸ்ரீஅப்பர் சுவாமிகள் உழவாரப்பணி மன்றத்தின் சார்பில் நடந்த இந்த பணிக்கு தலைவர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். செயலாளர் சண்முக வேலு, ஆவுடையப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்கரன் கோயில், திருவேங்கடம், கரிவலம்வந்தநல்லூர், குற்றாலம் பகுதியை சேர்ந்த பலர் இந்த பணியில் கலந்து கொண்டனர்.
கோயிலை சுற்றியுள்ள கருவேல மரங்களை வெட்டி அகற்றினார். கோயிலில் உள்ள அனைத்துப் பிரகாரங்களிலும் சமப்படுத்தி பண்படுத்தினர். மாலையில் சுவாமி மற்றும அம்பாளுக்கு 21 வகையான சிறப்பு அபிசேகம் மற்றும அலங்கார பூஜை கைலாய வாத்யக்குழு முழங்க நடந்தது.
திருமூலநாதர் பக்தர் பேரவை சார்பில் பாரதி சங்கரலிங்கம், மாருதி சேதுராமலிங்கம், ஆறுமுகம், ஐயப்பன், தம்புராஜ், கோசாலைராஜா, சங்கரன், பாலசுப்பிரமணியன், வெங்கடசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


