ஏரல் விஸ்வகர்மா கலை வளாகத்தில்
விஸ்வகுல உரிமை மீட்பு தினம் கொண்டாடப்பட்டது
ஆங்கிலேயர் காலத்தில் சித்தூர் அதாலத்துக்கோர்ட்டில்
விஸ்வகர்மா சமூகத்தினர்களுக்கும் வேதங்கள் ஓதி புரோகிதம் செய்ய உரிமை உண்டு என்று
ஆரணி அருகே சதுப்பேரி ஊரில் விஸ்வகுல பண்டிதர்
மார்க்க சகாய ஆச்சாரி அவர்களால் வழக்கு தொடுத்து
15.12. 1818 ல் வெற்றித் தீர்ப்புப் பெற்றரர் . 206 ம் ஆண்டு தினத்தை கொண்டாடும் விதமாக
பண்டிதர் மார்க்கசகாய ஆச்சாரி உருவப்படத்திற்கு மாலையிட்டு மலர் தூவி
மரியாதைச் செய்யப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில்
ஏரல் விஸ்வகுல வடபத்திரகாளியம்மன் ஆலய தலைவர் மகாராஜன் ஆச்சாரி தலைமை வகித்தார்.
நகைமதிப்பீட்டாளர் சங்க மாவட்ட முன்னாள் தலைவர் மகாராஜன்
ஆச்சாரி முன்னிலை வகித்தார்
பொற்கலைஞர் பொன் அருணன், பொற்கலைஞர் சின்னத்துரை, கவிஞர் ஏரல் ராஜன் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.
யோகா ஆர்வலர் தென்கரை மகாராஜன் இனிப்பு வழங்கினார்.
கவிஞர் ஏரல் ராஜன் நன்றி கூறினார்


