உடன்குடியில் விஸ்வகுல உரிமை மீட்பு தினம் கொண்டாடப்பட்டது.
உடன்குடி விஸ்வகர்மா சமுதாயம் சார்பில் உடன்குடி தெற்கு பஜாரில் பண்டிதர் மார்க்கசகாய ஆச்சாரி உருவ படம் வைக்கப்பட்டது. உடன்குடி நகர காங். தலைவர் எஸ்.எம்.பி.முத்து மாலையிட்டு மலர் தூவி
மரியாதைச் செய்தார். செல்வம் ஜீவல்லரி எஸ்.எஸ். சண்முகசுந்தரம் இனிப்பு வழங்கினார். வானமாமலை பெருமாள் வரவேற்றார். இதில் என்.கோபால், ஜோதி பாஸ், முத்துராஜ், சிவகுமார், எம். மாரிமுத்து, எஸ்.பாலகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


