தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள கிராமம் முத்தாலங்குறிச்சி. இந்த கிராமத்தில் தாமிரபரணி ஆற்று வெள்ளம் உள்ளே புகுந்து விடும் என முன்னேச்ச்ரிக்கையாக மின்சாரம் நிறுத்தப்பட்டுவிட்டது. இதனால் குடிதண்ணீர் நிறுத்தப்பட்டு விட்டது. இதனால் மக்கள் குடிதண்ணீர் இன்றி தவித்தனர். இதற்கிடையில் இங்கு வந்த ஒட்டபிடாரம் எம்.எல்.எ. சண்முகையா மின் இணைப்பை மீண்டும் கொடுக்க ஏற்பாடு செய்தார். அதோடு மட்டுமல்லாமல் இந்த ஊர் மக்களுக்கு வாகனம் மூலமாக குடிதண்ணீர் வழங்க நடவடிக்கை எடுத்தார். முத்தாலங்குறிச்சியில் உள்ள அனைத்து தெருக்களுக்கும் குடிதண்ணீர் வழங்கப்பட்டது. சமூக பாதுகாப்பு திட்ட துணை ஆட்சியர் ஷபிபூர்ரகுமான், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் லிங்கராஜ் , வருவாய் ஆய்வாளர் மகாராஜன், கிராம நிர்வாக அதிகாரி கந்தசுப்பு, பஞ்சாயத்து தலைவர் பொன்இசக்கி லெட்சுமணன் உள்பட பலர் உடன் இருந்தனர்.


