தாமிரபரணி நதியை சீரமைத்து மீட்டெடுக்க முதல் கட்டமாக ரூ 570 கோடி நிதியை ஓதுக்க வேண்டும் என்று திருநெல்வேலி காங்கிரஸ் எம்.பி.ராபர்ட் புரூஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக தில்லியில் மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் சி.ஆர். பாட்டீலிடம் எம்.பி ராபர்ட் புரூஸ் வெள்ளிக்கிழமை அளித்துள்ள கோரிக்கை மனுவில் தெரிவித்திருப்பதாவது & தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் தாலூகாவில் உள்ள மேற்கு தொடர்சி மலையின் பொதிகை மலையின் அகஸ்தியர் கூடம் சிகரத்திலிருந்து ராமயாணம் மற்றும் பண்டைய தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள தாமிரபரணி நதி உற்பத்தியாகிறது.
125 கிலோ மீட்டர் தொலைவு பயணிக்கும் பாரம்பரிய மிக்க வற்றாத புனித நதி 30 லட்சம் மக்களின் ஜீவ நதியாகும். இது தெற்கின் கங்கை என்று கருதப்படுகிறது. இது ஆதி சித்தர் அகஸ்தியர் மற்றும் ஹிந்து தர்மத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட புகழ்பெற்ற 18 சித்தர்களால் உருவாக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.
இந்த நதி உற்பத்தியாகும் அகஸ்தியர் மலை உயர்க்கோள காப்பகத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக 2016 ஆம் ஆண்டில் யுனெஸ்கோவால் அறிவிக்கபட்டுள்ளது. இது ஒரு பாரம்பரிய சுற்றுச்சூழல் முக்கிய இடமாகும். எட்டு அணைக்கட்டுககள், 11 கால்வாய்கள் கொண்டது இந்த நதி. விக்கிரமசிஙக்புரம் முதல் ஆத்தூர் வரை உள்ள இடங்களில் இந்த நதியில் கழிவு நீர் கலப்பதால் நதி நீர்மாசு அடைந்தாலும் திருநெல்வேலி மாவட்டம் 79 சதவீதமும் தூத்துக்குடி மாவட்டம் 21 சதவீதம் மக்களின் வாழ்வாரதாத்திற்கும் 8600 ஏக்கர் நிலத்தின் பாசனத்திற்கு பயனளிக்கிறது. இந்த நதியை மறுசீரமைப்பு செய்தவற்கு முதல் கட்டமாக ரூ 570 கோடியை ஒதுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டுளளது.
இந்த மனுவைப் பெற்றுக்கொண்ட அமைச்சர் சி.ஆர்.பாட்டீல், நதியின் மறு சீரமைப்புக்கு நிதி ஒதுக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தம்மிடம் உறுதி யளித்துள்ளதாக எம்.பி. ராபர்ட் புரூஸ் தெரிவித்துள்ளார்.


