தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டிணம், அரசு கேபிள் டிவி ஆப்பரேட்டர், எஸ்.ஜே.கென்னடி, தமிழக முதல்வர் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது.
தமிழக அரசின் நிறுவனமான அரசு கேபிள் டிவி நிறுவனம் ஏழை எளிய மக்களுக்கு (சந்தாதாரர்களுக்கு) செட்டாப் பாக்ஸை இலவசமாக வழங்கி வந்தது.
அரசு வழங்கிய செட்டாப் பாக்ஸ் மிக பழமையானது இதனால் அடிக்கடி செட்டாப் பாக்ஸ் பழுது ஏற்பட்டு வந்தது. இதனால் அரசு கேபிள் டிவி சந்தாதாரர்கள் அதிக அளவில் குறைந்து விட்டனர். இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதோடு அரசுக்கு கெட்ட பெயர் இருந்து வந்தது. இதனை பயன்படுத்தி தனியார் கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள் அதிக கட்டணம் வசூலித்து அரசு கேபிள் டிவி சந்தாதாரர்களை தன் வயப்படுத்தினர். இதனால் அரசுக்கு வருமான இழப்பு ஏற்படுவதோடு அரசை நம்பி பல லட்சங்கள் முதலீடு செய்துள்ள அரசு கேபிள் டிவி ஆப்ரேட்டர்களுக்கு மிகுந்த பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு வருகிறது.
தற்போது தமிழக அரசு கேபிள் டிவி சந்தாதாரர்களுக்கு நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய HD செட்டாப் பாக்ஸை அரசு கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு ரூபாய் 500 க்கு விற்க திட்டமிட்டுள்ளது . அரசு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் ஏற்கனவே பல லட்சங்கள் முதலீடு செய்து முதலீடு செய்த பணத்திற்கு வட்டி கட்ட முடியாமல் மிகுந்த கஷ்டப்பட்டு வருகிறார்கள். தற்போது HD செட்டாப் பாக்ஸ் 500 ரூபாய் கொடுத்து வாங்க மிகுந்த சிரமப்படுவார்கள். மேலும் இதனால் (பொதுமக்கள்) அரசு கேபிள் டிவி சந்தாதாரர்கள் 500 ரூபாய் பெரிய சுமையாக தெரிகிறது. இதனால் அரசு HD செட்டாப் பாக்ஸை வாங்க மறுப்பார்கள். இதனால் மேலும் அரசு கேபிள் டிவி சந்தாதாரர்கள் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளது.
ஆகவே அரசு கேபிள் டிவி சந்தாதாரர்கள் எண்ணிக்கையே உயர்த்தவும், இதனால் அரசுக்கு வருவாயை பெருக்கவும் , அரசு கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு பொருளாதார சுமையை குறைக்கவும் தமிழக அரசு கருணை கூர்ந்து அரசு கேபிள் டிவி சந்தாதாரர்களுக்கு (பொது மக்களுக்கு) இலவசமாக அல்லது குறைந்த கட்டணத்தில் HD செட்டாப் பாக்ஸ் வழங்க வேண்டுமெனவும்
“மேலும் ஒளிபரப்பை எம்.எஸ் ஓ இல்லாமல் அரசு கேபிள் டிவி ஆப்பரேட்டர்களுக்கு நேரடியாக வழங்க வேண்டும் எனவும்”
மின் கம்பத்தில் தான் தனியார் கேபிள் டிவி ஒயர்கள் உட்பட அனைவரும் கேபிள் ஒயர்களை கட்டியுள்ளனர். ஆனால் மின்வாரிய ஊழியர்கள் தனியார் கேபிள் டிவி ஆப்ரேட்டர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு கொண்டு தனியார் கேபிள்களை சேதப்படுத்தாமல் தொடர்ந்து அரசு கேபிளை மட்டும் வெட்டி சேதப்படுத்தி வருகிறார்கள். இதனால் அரசு கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு பொருளாதாரப் பிரச்சினை உட்பட பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டு வருகிறது மேலும் பொது மக்களுக்கு தொடர்ச்சியான ஒளிபரப்பை வழங்க முடியாமல் தடைபடுகிறது. இதனால் பொதுமக்கள் அரசு கேபிள் டிவி வேண்டாம் என்று தனியார் கேபிள் டிவிக்கு செல்கிறார்கள். இதனால் அரசுக்கு வருமான இழப்பு ஏற்படுகிறது. அரசு கேபிள் டிவி ஒயர்களை சேதப்படுத்தும் மின்வாரிய ஊழியர்கள் மற்றும் தனியார் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென மிகுந்த தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். என்று அந்த மனுவில் கூறியுள்ளார்.


