கிள்ளிகுளம் வேளாண்மைக் கல்லூரி தூய்மை பாரத இயக்க மாணவர்கள் சார்பில் கோடை கால முனைப்பு முகாம் நடந்தது.
இதில் சைக்கிள் மூலமாக காற்று மாசுபடுவதை தடுக்க மக்களிடையே சுகாதார விழிப்புணர்வு பேரணி நடந்தது. கல்லூரி முதல்வர் முனைவர் இராமலிங்கம் தலைமை வகித்தார். பாராளுமன்ற உறுப்பினர் முத்துக்கருப்பன் சைக்கிள் பேரணியை துவக்கி வைத்தார். பேரணி அனந்தநம்பிகுறிச்சி, மணக்கரை, ஆறாம்பண்ணை, கொங்கராயகுறிச்சி, ஸ்ரீவைகுண்டம், புதுக்குடி, பொன்னங்குறிச்சி, ஆதிச்சநல்லூர், கருங்குளம், தாதன்குளம், தெற்குகாரசேரி, சேரகுளம் வழியாக இராமனுஜம்புதூரை வந்தடைந்தது.
இதற்கான ஏற்பாடுகளை தூய்மை பாரத இயக்க பொறுப்பு அலுவலர் முனைவர் ராஜா பாபு செய்திருந்தார்.


