தூத்துக்குடி வருகிற 20ஆம் தேதி வடக்கு மாவட்ட தி.மு.க செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது என மாவட்ட செயலாளர் அமைச்சர் கீதாஜீவன் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க செயற்குழு கூட்டம் வருகிற 20ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு கலைஞர் அரங்கத்தில் மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ் தலைமையில் நடைபெற உள்ளது.
இதில், தி.மு.க தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தூத்துக்குடி வருகை குறித்தும், கழக வளர்ச்சிப் பணிகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட உள்ளது.
இக்கூட்டத்தில் மாவட்ட கழக நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாநகர, நகர, ஒன்றிய, பகுதி, பேரூர்கழகச் செயலாளர்கள், கழக சார்பு அணிகளின் மாவட்ட அமைப்பாளர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள அன்புடன் அழைக்கிறேன் என அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்துள்ளார்.


