தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை காரணமாக இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் அறிவித்துள்ளார்.
தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்துள்ளது. இதன் காரணமாக தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்கள் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் அறிவித்துள்ளார். மேலும் இன்று (12-12-24) நடைபெறவிருந்த ஆறு முதல் பன்னிரண்டாம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வுகள் அனைத்தும் நாளை (13-12-24) நடைபெறும் என முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார்.


