தூத்துக்குடி பேரூரணி காவலர் பயிற்சி பள்ளியில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட இரண்டாம் நிலை காவலர்களுக்கான பயிற்சி தொடங்கியது.
தூத்துக்குடி பேரூரணி காவலர் பயிற்சி பள்ளியில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட இரண்டாம் நிலை காவலர்களுக்கான 7 மாத கால அடிப்படை பயிற்சி தொடக்க விழா நேற்று நடந்தது. காவல்துறை தலைவர் (பயிற்சி) எம்.வி. ஜெயகௌரி பயிற்சியை தொடங்கி வைத்தார். மேலும், அவர் அனைத்து பயிற்சி பள்ளி, பயிற்சி காவலர்களுடன் காணொலி மூலமாக உரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் வெவ்வேறு பயிற்சி பள்ளிகளில் இருந்தபடியே காணொலி காட்சி மூலம் காவல்துறை துணைத் தலைவர்(பயிற்சி), காவல் கண்காணிப்பாளர்கள்(பயிற்சி), அனைத்து பயிற்சி பள்ளிகளின் முதல்வர்கள், துணை முதல்வர்கள், அனைத்து சட்ட போதகர்கள், அனைத்து கவாத்து போதகர்களும் பங்கேற்றனர்.


