கோகோ போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற நாகலாபுரம் எஸ்.கே.கே. இந்து உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
தூத்துக்குடி காமராஜ் கல்லுாரி வளாகத்தில் மாவட்ட அளவிலான 17 வயதிற்கு உட்பட்ட மாணவர்கள் பிரிவு கோகோ போட்டி நடந்தது. இப்போட்டியில் மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து பல்வேறு பள்ளிகளை சேர்ந்த 10 அணிகள் கலந்து கொண்டன. இறுதி போட்டியில் நாகலாபுரம் என்.கே.கே. இந்து உயர் நிலைப் பள்ளியும், மெய்ஞானபுரம் ஆம்ரோஸ் மேல் நிலைப் பள்ளியும் மோதின.
முடிவில் ஆம்ரோஸ் மேல்நிலைப்பள்ளி முதல் இடம்பெற்றது, நகலாபுரம் எஸ். கே.கே. இந்து உயர்நிலைப் பள்ளி கோ.கோ.அணி 2ம் இடம் பெற்று வெள்ளி பதக்கம் பெற்றனர். வெற்றி பெற்ற கோ.கோ அணி குழு மாணவர்களை பள்ளி செயலர் ஜெயராஜ், தலைமை ஆசிரியை சுசீலா, உடற்கல்வி ஆசிரியர் பார்த்திபன், மற்றும் பள்ளி ஆசிரியர்கள், அலுவலர்கள், பெற்றோர்கழக உறுப்பினர்கள், முன்னாள் மாணவர்கள், உட்பட பலர் பாராட்டினர்.


