தூத்துக்குடியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு மாபெரும் இலவச சிறப்பு மருத்துவ முகாம் வருகிற 7ஆம் தேதி நடைபெற உள்ளது என திமுக வடக்கு மாவட்ட செயலாளர் அமைச்சர் பி.கீதாஜீவன் தெரிவித்துள்ளார்
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க வழக்கறிஞரணி, மருத்துவர் அணி சார்பில் சென்னை கற்பக விநாயகா பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் தூத்துக்குடி ஜீவன் மருத்துவமனை இணைந்து நடத்தும் மாபெரும் இலவச சிறப்பு மருத்துவ முகாம் 07.12.2024 சனிக்கிழமை அன்று தூத்துக்குடி 2ம் கேட் அருகில் உள்ள S.A.V. ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வைத்து காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெறுகிறது.
இதில் சென்னை கற்பக விநாயகா பல்மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சார்பில் நடைபெறும் பல் மருத்துவ முகாமில் பல் எடுத்தல், புதிய பல் கட்டுதல், பல் அடைத்தல், பல் சுத்தம் செய்தல், பல் சொத்தை நீக்குதல் ஆகியன இலவசமாக நடத்தபடுகிறது. தூத்துக்குடி ஜீவன் மருத்துவமனை சார்பில் நடைபெறும் பொது மருத்துவமுகாமில் உயரம்/எடை சரிப்பார்த்தல், இரத்தத்தில் சர்க்கரை அளவு, இரத்த அழுத்தம், இலவச எலும்பு அடர்த்தி ஆகிய பரிசோதனைகள் இலவசமாக வழங்கப்படுகிறது.
மேலும் பொது மருத்துவம் மற்றும் எலும்பு & மூட்டு மருத்துவம் பற்றிய மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்படுகிறது. மருத்து மாத்திரைகள் இலவசமாக வழங்கப்படுகிறது. பொதுமக்கள் அனைவரையும் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு அமைச்சர் பி.கீதாஜீவன் தெரிவித்துள்ளார்.


