கருங்குளம் வட்டாரதிற்கு உட்பட்ட கலியாவூர் கிராமத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் மூலம் இலவச மருத்துவ முகாம் ஆர்.சி நடுநிலைப் பள்ளியில் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கிருஷ்ணஜோதி அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. முகாமிற்கு வட்டார சுகாதார மேற்பார்வையாளர் முத்துக்குமரன் வெங்கடேசன் வரவேற்புரை அளித்தார் , சிங்கத்தாகுறிச்சி மருத்துவ அலுவலர் டாக்டர் முத்தமிழ் செல்வி சிறப்புரை ஆற்றினார், பஞ்சாயத்து தலைவர் . தலைமை ஆசிரியை முகாமிற்கு முன்னிலை வகித்தனர் . முகாமிற்கு பல்வேறு மருத்துவ துறை சிறப்பு மருத்துவர்கள் கலந்து கொண்டு கிராம மக்களுக்கு மருத்துவ சேவை அளித்தனர் மற்றும் ஆய்வக நுட்புணர்கள், பகுதி சுகாதார செவிலியர், சுகாதார ஆய்வாளர்கள், கிராம சுகாதார செவிலியர்கள், இடை நிலை சுகாதார பணியாளர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் முகாமிற்கு ஏற்பாடு செய்து முகாம் சிறப்பாக நடைபெற உதவி செய்தனர். முகாமின் மூலம் கிராம மக்கள் 1205 பேர் பயன் பெற்றனர்


