தூத்துக்குடி தருவைக்குளம் மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை மேற்கொண்ட மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சருக்கு கனிமொழி எம்பி நன்றி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், “தூத்துக்குடி மாவட்டம் தருவைக்குளம் பகுதியைச் சேர்ந்த 10 மீனவர்கள் லட்சத்தீவு அருகே கைது செய்யப்பட்டிருந்த நிலையில், அவர்களை உடனடியாக விடுதலை செய்ய ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்களிடம் கடிதம் வழங்கியிருந்தேன். எனது கோரிக்கையை ஏற்று மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கைகளை மேற்கொண்ட ராஜ்நாத் சிங் அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.


