தூத்துக்குடியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு திமுக முன்னோடிகளை மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் சந்தித்து கெளரவித்தார்.
இது தொடர்பாக மேயர் வெளியிட்ட முகநூல் பதிவு “தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு தங்கள் வாழ் நாளில் தன் நலம் கருதாது கழகமே குடும்பம் எனவும் கழகத்தின் இக்கட்டான காலங்களிலும் போராடங்களிலும் கலந்து கொண்டு சிறை சென்று கழகமே உயிர் என் வாழ்ந்த கழகத்தின் மூத்த முன்னோடிகளான முன்னாள் காவலர் வெற்றிவேல், ஜோசப், முன்னாள் கவுன்சிலர் மாரியப்பன், சுசீ ரவீந்திரன், வள்ளிராஜன், குட்டிராஜா, பத்திரகாளிமுத்து, செந்தூர்பாண்டி, காசி, நடேசன், விஜயகுமார், மாடசாமி, சுப்பிரமணியன் மற்றும் கருப்பையா ஆகியோரை மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் சந்தித்து கெளரவித்தார்.
நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் கோட்டு ராஜா, வட்ட செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன், செயற்குழு உறுப்பினரும் வழக்கறிஞருமான ஜான் அலெக்ஸாண்டர், வட்ட கழக செயலாளர்கள் முனியசாமி, பிரசாந்த் மற்றும் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.


