தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு அமைச்சர் கீதாஜீவன் அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.
திமுக இளைஞர் அணி செயலாளரும், தமிழக துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் 47வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை வடக்கு மாவட்ட திமுக சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடப்பட உள்ளது.
பிறந்த நாளை முன்னிட்டு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு அரசியல் கட்சியினர், திரைப்பிரபலங்கள் பலரும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், துணை முதல்வரை சமூக நலம் – மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் நேரில் சந்தித்து பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.


