தூத்துக்குடியில் கே.சின்னத்துரை அன்கோ சார்பில் நடைபெற்ற குழந்தைகள் தினவிழா கிட்ஸ் சூப்பர் ஸ்டார் ஓவியப் போட்டியில் பங்கேற்ற 300 குழந்தைகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
தமிழக மக்களின் பேராதரவை பெற்ற பிரபல ஜவுளி மற்றும் நகை விற்பனை நிறுவனமான கே.சின்னத்துரை அன்கோ தங்க மாளிகை, திருச்செந்தூர், ஏரல், தூத்துக்குடி மற்றும் சென்னை செம்பாக்கத்தில் இயங்கி வருகிறது. தூத்துக்குடி கே.சின்னத்துரை அன்கோ சார்பில் குழந்தைகள் தினவிழாவை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவியருக்கான கிட்ஸ் சூப்பர் ஸ்டார் ஓவிய போட்டி அறிவிக்கப்பட்டிருந்தது.
இதில் 1, 2, மற்றும் 3ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இயற்கையின் வண்ணம், வண்ண பறவைகள், சிந்தனை பேசும் சித்திரம் ஆகிய தலைப்புகளிலும், 4, 5, மற்றும் 6ஆம் வகுப்பு மாணவர்களுக்கு என் சுற்றுப்புறம் என் பொறுப்பு, வளர்ச்சி இந்தியா, உலகம் போற்றும் எங்கள் கலாச்சாரம் ஆகிய தலைப்புகளில் போட்டிகள் நடத்தப்பட்டது. ஓவியப் போட்டியில் சுமார் 300 குழந்தைகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
போட்டியில் வெற்றிபெற்ற குழந்தைகளுக்கு பரிசளிப்பு விழா கே.எஸ்.பி.எஸ்.திருமண மண்டபத்தில் நடந்தது. கே.சின்னத்துரை அன் கோ பங்குதாரர் அரி.ராமகிருஷ்ணன் அனைவரையும் வரவேற்றார். கே.சின்னத்துரை அன் கோ நிர்வாக இயக்குநர்கள் செல்வராஜ், ஜெயக்கொடி ஆகியோர் தலைமை வகித்தனர். காமாக்ஷி வித்யாலயா பள்ளி முதல்வர் மீனாகுமாரி முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட எஸ்.ஆர்.எஸ்.குழுமங்களின் தலைவர் சுரேஷ்குமார், நிர்வாக இயக்குநர் சுபாமித்ரா, ஆகியோர் போட்டியில் வென்ற மாணவ, மாணவியருக்கு பரிசு பொருட்கள், சான்றிதழ்களை வழங்கினார்கள்வ.உ.சி.கல்லூரி மனிதவள பயிற்சியாளர் பேராசிரியர் ராஜா தெ.பேச்சிமுத்து மாணவ, மாணவியருக்கு பயிற்சிகளை வழங்கி பாராட்டினார். தமிழண்டா கலைக்குழு உலகாள்வோன் பாரம்பரிய உணவு குறித்து பேசினார். போட்டியில் பங்கேற்ற குழந்தைகள் தங்களது கைவண்ணத்தை வரைந்து குடும்பத்தினருடன் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


