தூத்துக்குடியில் சமூக செயற்பாட்டாளர்கள் மீது காவல்துறையினர் அடக்கு முறை செலுத்தக்கூடாது என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மக்கள் நலக் கூட்டமைப்பு சார்பில் தமிழர் விடியல் கட்சி, புரட்சிகர இளைஞர் முன்னணி், சிபிஐ(எம்எல்), மனித நேய மக்கள் கட்சி, தமிழ்ப்புலிகள் கட்சி, ஆதித் தமிழர் கட்சி நிர்வாகிகள் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு விடுத்துள்ள கோரிக்கை மனுவில் “பொட்டலூரணி பகுதியில் உள்ள மீன் கழிவு ஆலைகளை மூடக் கோரி கிராம மக்கள் உயர்நீதிமன்ற வழிகாட்டுதல்களின் படி நேற்று தூத்துக்குடியில் போராட்டம் நடத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சமூக செயற்பாட்டாளர்கள், மக்கள் பணியாற்றுகின்ற கட்சியின் மாவட்டச் செயலாளர்களாகிய எங்களை கலந்து கொள்ளக்கூடாது. இல்லையென்றால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்படுவீர்கள் என்று காவல்துறையினர் அச்சுறுத்தினர். எனவே, இனி வரும் காலங்களில் காவல்துறையினர் இதுபோன்ற அடக்குமுறையை செயல்படுத்த கூடாது என்று வலியுறுத்தினர்.


