தூத்துக்குடியில் 3வது நாளாக தொடர் கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
குமரிக் கடல், அதை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தூத்துக்குடியில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இதன் காரணமாக தூத்துக்குடியில் 3வது நாளாக இன்றும் மழை பெய்து வருகிறது.
மழை காரணமாக தூத்துக்குடி மாநகரப் பகுதிகளான மில்லர்புரம், திருவிக நகர், மட்டக்கடை, 2ஆம் ரயில்வே கேட், ஸ்டேட் பேங்க் காலனி, பி அன்ட் டி காலனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் மழை நீர் தேங்கியுள்ளது. பல்வேறு பகுதிகளில் மாநகராட்சி சார்பில் மழை நீரை வெளியேற்றும் பணிகள் நடந்து வருகிறது. சாலைகளில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினா். சாலையோர வியாபாரிகள், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது


