தூத்துக்குடி மாநகரப் பகுதியில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்றும் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி மாநகரப் பகுதியில் இன்று பெய்த கன மழையை தொடர்ந்து பர்மா காலனி, அன்னை தெரசா நகர் மற்றும் பிஎம்சி பள்ளி ஆகிய பகுதிகளில் தற்போது நடைபெற்று வரும் மழைநீர் வெளியேற்றும் நடவடிக்கைகளை மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது, மாநகராட்சி ஆணையர் மதுபாலன், வட்ட செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன், பகுதி செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான சுரேஷ்குமார், மாமன்ற உறுப்பினர்கள் கண்ணன், ராமர், திமுக நிர்வாகிகள், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடன் சென்றனர்.


