சாத்தான்குளம் அருகே பேய்க்குளத்தில் உலகளந்த அம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடந்தது. ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள பெருமாள்குளம் ஸ்ரீஉலகளந்த அம்மன் கோயிலில் மிகவும் பிரசித்தி பெற்ற அந்த கோவிலின் மகா கும்பாபிஷேக விழா தொடர்ந்து 3 நாட்களாக நடந்து வந்தது. இந்நிலையில் முதல் நாள் காலை மங்கள இசையுடன் விழா துவங்கியது. தொடர்ந்து மூன்று நாட்கள் நடந்த இந்த நிகழ்சியின் முக்கிய நிகழ்வான மகா கும்பாபிஷேகம் இன்று நடந்தது.
அதற்காக இன்று காலை விஷேச பூஜைகள் நடந்தது. அதன்பின்பு காலை கடம் புறப்பாடு நடந்தது. அதன்பின்பு முக்கிய நிகழ்வான விமானத்தின் கும்பாபிஷேகம் நடந்தது. பின்னர் மூலாலய ப்ரவேசம், மஹாகும்பாபிஷேகம், மஹா அபிஷேகம், தீபாராதனை, சகஸ்ரநாம அர்ச்சனை, அன்னதானம் நடைபெற்றது. இந்த வழிபாட்டில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


