தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தில் ஊதிய உயர்வு உட்பட பல்வேறு கோரிக்கைகளை மத்திய அரசு, துறைமுக நிர்வாகம் நிறைவேற்ற வேண்டும் என பிஎஸ்ஏ சிகால் நிறுவன ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக பிஎஸ்ஏ சிகால் கன்டெய்னர் டெர்மினல் ஸ்டாஃப் யூனியன் (HMS) வெளியிட்ட அறிக்கையில், “பிஎஸ்ஏ சிகால் சிங்கப்பூர் பன்னாட்டு நிறுவனத்தால் ஏமாற்றப்படும் இந்திய பொருளாதாரம், இந்திய தொழிலாளர்கள் மற்றும் வ.உ.சி துறைமுகம் கடந்த 25 ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் நிரந்தர தொழிலாளர்களுக்கு BOT ஒப்பந்தப்படி இதுவரை ஊதிய உயர்வும், பதவி உயர்வும் வழங்கப்படவில்லை.
பல தொழிலாளர்களின் உயிர்களை காவு வாங்கியும் இன்னும் காவு வாங்க துடிக்கும் பழைய காலாவதியான கிரேன்களை வைத்து துறைமுகத்தையும், கிரேன்களை ஆய்வு செய்யும் அதிகாரிகளையும், தொழிலாளர்களையும் ஏமாற்றி வரும் நிர்வாகமே தொழிலாளர்களின் உயிருக்கு உத்திரவாதம் அளிக்க முடியுமா?
பிஎஸ்ஏ சிகால் நிர்வாகமே சரக்கு பெட்டக முனையத்தை வ.உ.சி துறைமுக நிர்வாகத்திடம் ஒப்படைக்க முடிவு எடுத்ததை அங்கீகரிக்கப்பட்ட தொழிலாளர்களின் சங்கத்திடம் 3 தெரிவிக்காததின் மர்மம் என்ன?
துறைமுகத்திற்கு மாதம் மாதம் கட்ட வேண்டிய கோடி கணக்கான பணத்தை துறைமுகத்திற்கு 5 செலுத்தாமல் ஏமாற்றிய ராயலிட்டி பணம் எங்கே செல்கிறது?
ஒரு சரக்கு பெட்டகத்திற்கு துறைமுகம் நிர்ணயத்த விலையை தாண்டி அதிகமாக வாங்கிய பணம் எங்கே செல்கிறது? மத்திய அரசே மற்றும் வ.உ.சி துறைமுக நிர்வாகமே உடனடியாக நடவடிக்கை எடு ! தொழிலாளர்களின் எதிர்கால வாழ்க்கைக்கு உத்திரவாதம் வழங்க வேண்டும் என பிஎஸ்ஏ சிகால் கன்டெய்னர் டெர்மினல் ஸ்டாஃப் யூனியன் (HMS) கோரிக்கை விடுத்துள்ளது.


