தூத்துக்குடி திரேஸ்புரம் முகத்துவாரத்தில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் கூறுகையில், “தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழை முன்னெச்சரிக்கையாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம். அதன் ஒரு பகுதியாக திரேஸ்புரம் பகுதியில் அமைந்துள்ள முகத்துவாரத்தில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தேன்” என்றார்.
ஆய்வின்போது, பொதுக்குழு உறுப்பினர் கோட்டு ராஜா, பகுதி செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான சுரேஷ் குமார், திமுக நிர்வாகிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடன் சென்றனர்.


