கருங்குளத்தில் பஸ் எரித்த 3பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
கடந்த 25 ந்தேதி கருங்குளம் அருகே உடன்குடியில் இருந்து நெல்லைக்கு வந்து கொண்டிருந்த அரசு பேருந்து 3 நபர்களால் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்டது. இதில் பயணம் செய்த வள்ளியம்மாள் (70) என்பவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதற்கிடையில் பஸ் எரித்த சம்பவத்தில் மணக்கரையை சேர்ந்த கள்ளவாண்டன்(32), சிவராமன் (32),பேச்சிமுத்து என்ற கோயா(27) ஆகிய மூன்று பேரை செய்துங்கநல்லூர் போலிசார் கைதுசெய்தனர். இவர்களை தூத்துக்குடி பேரூரணி சிறையில் போலிசார் அடைத்திருந்தனர்.
தற்போது இவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. மாவட்ட ஆட்சி தலைவர் சந்தீப் நந்தூரி பரிந்துரையின் பேரில் எஸ்.பி.முரளி ராம்பா மூன்று பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்து பாளை மத்திய சிறையில் அடைத்தார்.


