செய்துங்கநல்லூரில் ரமலான் பெருநாள் முன்னிட்டு தொழுகை நடந்தது.
செய்துங்கநல்லூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் அல்மஸ்ஜிதுன் நூர் பழைய பள்ளிவாசலில் ரமலான் பெருநாள் தொழுகை நடந்தது.
கிளை தலைவர் சாதிக் தலைமை வகித்தார். பொருளாளர் செய்யது இபுராகிம் முன்னிலை வகித்தார். இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் பேச்சாளர் கபூர் மிஸபாஹீ குத்பா உரை நிகழ்த்தினார். இந்த நிகழ்ச்சியில் செயலாளர் வகாப், துணை தலைவர் அப்துல்கனி, துணை செயலாளர் கரீம்பாஷா உள்பட பலர் கலந்து கொண்டனர்.


