தூத்துக்குடியில் உலக சர்க்கரை நோய் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு தினமும் நடப்போம் விழிப்புணர்வு நடைப்பயிற்சிப் போட்டி நவ.1 முதல் 10 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இது தொடர்பாக டாக்டர் அருள்ஸ் சர்க்கரை நோய், வாழ்வியல் முறை ஆராய்ச்சி மையம் வெளியிட்ட அறிக்கையில், “உலக சர்க்கரை நோய் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு சர்க்கரை நோயைக் குறைக்க தினமும் நடப்போம் விழிப்புணர்வு நடைப்பயிற்சிப் போட்டி நவ.1 முதல் 10 ஆம் தேதி வரை வரை நடைபெற உள்ளது. தினந்தோறும் 7,000 அடிகள் நடப்பது மூலம் சர்க்கரை நோயாளியின் இரத்தசர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதில் பெரிதும் உதவும்.
சர்க்கரை நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி மக்களின் நல்வாழ்வைக் காப்போம். உங்கள் நலனில் அக்கறை காட்டும் டாக்டர் ஆரத்தி கண்ணன் அருள் டயபட்டிக் லைஃப் சென்டர் நடத்தும் சர்க்கரை நோய் விழிப்புணர்வு நடைப்பயிற்சிப் போட்டியில் கலந்து கொண்டு, உங்கள் உடல் ஆரோக்கியத்தை பரிசாகவும், மேலும் பல சிறப்பு பரிசுகளையும் வெல்லுங்கள்! நீங்கள் இந்த 10 நாட்களும் தினமும் 7,000 அடிகள் நடப்பதே எங்களின் நோக்கம்.
தினசரி நீங்கள் நடக்கும் 7,000 ஸ்டெப்ஸ் மொபைல் ஸ்க்ரீன் ஷாட்டை தினமும் எங்கள் வாட்ஸ்அப் எண்ணிற்கு +91 95009 84478 அனுப்ப வேண்டும். பெறப்பட்ட ஸ்க்ரீன் ஷாட்டின் அடிப்படையில் 10 வெற்றியாளர்களுக்கு நவம்பர் 10ஆம் தேதி அன்று சுந்தரம் அருள்ராஜ் மருத்துவமனையில் நடைபெறும் இலவச சர்க்கரை நோய் முகாமில் (காலை 08.00 மணி-பகல் 2 மணி வரை) வைத்து குலுக்கல் முறையில் பரிசு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


