கல்லறை திருநாளை முன்னிட்டு தூத்துக்குடி விசைப்படகு மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லவில்லை.
உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களால் நவம்பர் 2ஆம் தேதி கல்லறை திருநாள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் விசைப்படகு மீனவர்கள் இன்று (நவ.2) மீன்பிடிக்க கடலுக்குச் செல்லவில்லை. இதன் காரணமாக 272 விசைப்படகுகள் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.


