முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்குகிறது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில். இந்த கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்த வண்ணம் உள்ளனர். பக்தர்கள் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளி நாடுகளைச் சேர்ந்தவர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள், திரைப்பிரபலங்களும் கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வருகை தந்து வருகின்றனர்.
இதற்கிடையில் நடிகர் ஜீவா, பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவான பிளாக் திரைப்படம் கடந்த 11ஆம் தேதி வெளியாகி பொதுமக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த நிலையில் இன்று பிளாக் திரைப்படத்தில் நடித்த நடிகர் ஜீவா தான் நடித்த பிளாக் திரைப்படம் மாபெரும் வெற்றியடைய வேண்டி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வருகை தந்தார்.
அவர் பேட்டரி காரில் ஏறி கோவில் முன்பு வந்து இறங்கினார். அதைத் தொடர்ந்து கோவிலுக்குள் சென்ற அவர் திருச்செந்தூர் மூலவர், சண்முகர், வள்ளி தெய்வானை, தட்சிணாமூர்த்தி மற்றும் சத்ரு சம்ஹார மூர்த்தி ஆகியோரை வணங்கினார்.
கோவிலில் தரிசனம் முடித்து வெளியே வந்த நடிகர் ஜீவாவுடன் பக்தர்கள் நின்று புகைப்படம் எடுத்தும், செல்பி எடுத்தும் கை கொடுத்தும் மகிழ்ந்தனர். அதைத் தொடர்ந்து அங்கிருந்து கிளம்பினார்.


