செய்துங்கநல்லூர் ஜெயின்ட் சேவியர்ஸ் பாலிடெக்னிக் கல்டலூரியில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பிறந்த நாளை முன்னிட்டு மரக்கன்று நடப்பட்டது. கல்லூரி முதல்வர் ஜான் பால் தலைமை தாங்கி மரக்கன்று நட்டார். கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் ஆறுமுகசேகர் மற்றும் நாட்டுநலப்பணித்திட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர். விழா ஏற்பாடுகளை கல்லூரி தாளாளர் டாக்டர் ஸ்டீபன் தலைமையில் துறைத்தலைவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.


