நதியின் பெருமை
வற்றாத தாமிரபரணி ஆறு
பொதிகைமலையில் உற்பத்தி
ஆகி பல உபநதிகளுடன்
இணைந்து வங்கக்கடலில் சங்க
மிக்கிறது. குறிஞ்சி, முல்லை,
மருதம், நெய்தல், பாலை என
ஐவ்வகை நிலங்களில் பாயும்
ஒரே நதி தாமிரபரணி தான்.
மணிமுத்தா,கோதை,பச்சையாறு
சித்திரா நதி, ராமநதி, அருணை
பாலாறு, கடனை, கடகை,பூர்ணா
பூர்னை போன்ற நதிகள் தாமிர
பரணியும் பொருந்தி வருவதால்
தாமிரபரணிக்கு பொருநை என்ற
பெயரும் முற்காலத்தில் வழங்க
லாயிற்று. இரு நதிக்கரையிலும்
எண்ணற்ற கோயில்களும், தலங்
களும், வயல்வெளிகளும், கிராம
நகர்புறங்களும் இருப்பது சிறப்
புக்குரியது. அதோடு நதியில் 242
கல்மண்டபங்களும், படித்துறை
களும் உள்ளன. அதில் 156 கல்
மண்டபங்கள், தீர்த்தக்கட்டங்கள்
அதன் அருகில் உள்ள கற்பாறை
களில் ஆதிகாலத்தில் செதுக்கப்
பட்ட புடை சிற்பங்கள் சிறப்பா
னது. இவைகள் மூலம் நம் பழந்
தமிழர்களின் நாகரீகம், வரலாறு
தொன்மைகளை அறியலாம்.
சங்குமண்டபம்
தவிர கல்மண்டபங்களில் குறிப்
பாக சங்குமண்டபங்கள் நதியில்
ஒவ்வொரு (காத தூரம்) 7 கிமீ
தொலையில், ஆதிகாலத்தில்
அமைக்கப்பட்டது ஒரு விசேச
காரணம் உண்டு. அக்காலத்தில்
வெள்ள அபாயத்தினை மக்களு
க்கு சங்கு சத்தமூலம் தெரிவிக்
கும் விதமாக இந்த சங்கு அல்லது சங்கினி மண்டபம் நதி
யின் நடுவில் கட்டப்பட்டது குறிப்
பிடத்தக்கது. இம்மண்டபத்தின்
மேற்கூரை கூம்புவடிவ சங்கு
போல் அமைப்பாக இருக்கும்.
வெள்ளநீர் அந்த சங்கில் சுழி
போல் சுழன்று கீழிரங்கும்போது
ஏற்படும் சப்தம் சங்கு ஒலியாக
ஒலிக்கும். இதைக்கேட்ட மக்கள்
வெள்ளம் அபாயம் என அறிந்து
கொண்டு ஆடுமாடுகளையும் தம்
உடமைகளை உயிர்களை காப்
பாற்றி இருக்கின்றன. இன்று
இச்சங்குமண்டபங்கள் கேட்பார்
இன்றி இடிந்து சிதிலமடைந்து
காணப்படுகின்றன.
நதியின் குறுக்கே
அணைக்கட்டுகள்
நதியின் துறுக்கே முற்கால அர
சர்கள் 7 அணைகளையும் அதிலி
ருந்து பிரியும் 9ம் கால்வாய்களை
யும் கட்டி ஒரு சொட்டு தண்ணீரை
வீணாக்காமல் விவசாயம் செழிக்க பயன்படுத்தியுள்ளனர்.
அவை 1. கோடை மேலழகியன்
அனைக்கட்டு அதில் வடக்கு தெற்கு என 2 கால்வாய்கள்.
2. நதியுண்ணி அனைக்கட்டு அதில் பிரியும் நதியுண்ணி கால்
வாய். 3. கன்னடியன் அணைக்
கட்டு அதில் பிரியும் கன்னடியன்
கால்வாய். 4. அரியநாயகிபுரம்
அணைக்கட்டு இதிலிருந்து பிரி
யும் கோடகன்கால்வாய்.5.பழவூர்
அணைக்கட்டு இதிலிருந்து
பாளையங் கால்வாய். 6. சுத்த
மல்லி அணைக்கட்டுஇதிலிருந்து
பிரியும் திருநெல்வேலிகால்வாய்
7. மருதூர் அணைக்கட்டு இதிலி
ருந்து மருதூர் கீழ மற்றும் மேலக்
கால்வாய் என இருகால்வாய்கள்
என அரசர்கள்களால் கட்டப்பட்டு
தென்னகத்தை செழிப்பாய் ஆக்கி, யாரிடமும் உணவுக்காக
கையேந்தவுடமால் ஆட்சி செய்தி
ருக்கிறார்கள். பின்னர் ஆங்கிலே
யர் ஆட்சிகாலத்தில் ஸ்ரீவைகுண்
டம் அணைகட்டப்பட்டு, வடகால்
தென்கால் என இரு கால்வாய்
களை ஆங்கிலேயர்கள் வெட்டி
உள்ளனர். மேற்கண்ட கால்வாய்
கள் மட்டும் இல்லையென்றால்?
கிராம, நகர்புற சாக்கடைகள் எல்
லாம் நேரடியாக தாமிரபரணி ஆற்றில் கலந்திருக்கும், 25
ஆண்டுகளுக்கு முன்னரே
குடிக்க தகுந்த நீர் , குடிக்க லயக்
கற்ற நீராய் ஆயிருக்கும். காரணம் தற்போதைய கிராம
நகர சாக்கடைகள் பெரும்பாலும்
80% மேற்கண்ட 11 கால்வாய்க
ளில்தான் நேரடியாக கலக்கிறது
என்பது குறிப்பிடதக்கது.
குடிநீர் ஆதாரம்
மட்டுமின்றி தாமிரபரணி நதி
பல லட்சம் மக்களுக்கு குடிநீர்
ஆதாரமாய் இருக்கிறது. நதியின்
படுகையில் நூற்றுக்கணக்கான
உறைகிணறுகள் கூட்டு குடிநீருக்
காக மக்கள் இத்தண்ணீரையே
நம்பியுள்ளனர்.
நிலத்தடிநீர்ஆதாரம்
அதோடு நிலத்தடி நீருக்கு தாமி
ரபரணி உயிர் ஆதாரமாய் இருக்
கிறது. இதனால் இயற்கை சீற்ற
மாய் பூமி அதிர்வு ஏற்பட்டாலும்,
அதன் அதிர்வலையை குறைப்
பது நதியின் பங்களிப்பே. கார
ணம் நிலத்திற்குள் நீரை 80 மைல் சுற்றளவில் செலுத்தி வரு
கிறது. ஆகவே நதியுள்ளிருக்கும் மணலை அள்ளாமல் நாம் பாது
காக்க வேண்டும்.
நீரைசுத்தம்செய்யும் செடிகள்
நதியின் இரு கரைகளிலுள்ள
அக்கால மரங்கள் செடிகொடிகள்
குறிப்பாக தாழம்பூ, கல்வாழை
பூலாத்தி, சங்கம் குப்பி, இண்டு,
இசங்கு, நாணல், கல்தாமரை,
சேம்பு, கோரை, தர்பை, கல் மூங்
கில், கூந்த பனை, மற்றும் நீரை
சுத்தம் செய்யும் அபூர்வ மூலிகை
செடிகளும் தண்ணீரை பாது காக்க துணையாய் இருக்கின்
றன.
இன்றையக்கழிவுகள்
இப்படிப்பட்ட நமது தாமிரபரணி
இன்று சாக்கடைகளாலும், கழிவு
களாலும், துணிகளாலும்,
உடைத்தெரியப்பட்ட கண்ணாடி
படங்கள், மதுபாட்டில்கள் மற்றும்
ஆலைக்கழிவுகளாலும்,
மலம் ஜலக் கழிவுகளாலும்,
வாகன கழிவுகள், சோப்பு, ரசாய
னக் கழிவுகளாலும், வயல்வெளி
மருந்து கழிவுகளாலும், இறைச்சி
மருத்துவ கழிவுகளாலும் இன்னும் எத்தனையே பல கழிவு
களால் தினந்தோறும் மக்களால்
நதியில் கொட்டப்பட்டு நதி மாசு
அடைந்து வருகிறது. அதோடு
நதியின் படுக்கையில் நீருக்கு
வேண்டாத நீர் கருவை, வேலி
காத்தான், அமலை, ஆகாயத்தா
மரை, பார்த்தீனியா போன்ற
செடிகள் வளர்ந்து நீர்போகும்
பாதையை பாழ்படுத்தி வருகி
றது.
பாதுகாப்பது நமது உரிமை
இருப்பினும் தாமிரபரணி
தாய் இவற்றெல்லாம் மீறி நல்ல நீரை நமக்கு தந்து நம்
தாகத்தை தீர்த்து வருகிறாள்.
அப்படி தாகம் தீர்த்து வரும் நம்
தாமிரபரணி நதியை, அதிக மாசு
தற்கு முன் காப்பற்றி அதை
எப்போதும் சுத்தமாக வைத்தி
ருக்க பாடுபடுவோம்.
நதி நமக்கானது
அதை பாதுகாப்பது
நமக்கு உரிமையானது.
கிரிக்கெட்மூர்த்தி
சுற்றுச்சூழல் ஆர்வலர்
விக்கிரமசிங்கபுரம்


