தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள மங்களகுறிச்சி தாமிரபரணி ஆற்றின் குறுக்கே தடுப்பனை ஒன்று உள்ளது.
இதில் ஸ்ரீவைகுண்டம் அனையிலிருந்து உபாp நீர் வெளியேறும்போது அந்த நீர் இந்த குரங்கணி, மங்களகுறிச்சி தடுப்பனை மூலம் சேமிக்கப்பட்டு உடன்குடி, திருச்செந்தூர் உள்ளிட்ட பல கிராமங்களுக்கு குடிநீர் தேவைக்காக சுமார் 27 போர்வெல் அமைத்து குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த தடுப்பனையில் உள்ள நீhpல் ஆகாய தாமரை என்கிற அமலை செடிகள் அதிக அளவில் வளர்ந்துள்ளதால் நீர் அசுத்தமடைந்து உள்ளது. மேலும் கிhpமிகள் பரவும் அபாயமும் உள்ளது. ஆற்றை சுத்தம் செய்ய சுற்றுவட்டார பகுதி மக்கள் அரசிடம் கோhpக்கைவிடுத்து வந்தனர்.
இந்தநிலையில் மக்கள் நீதி மையம் கட்சி சார்பாக ஏற்படுத்தப்பட்ட விசில் என்ற ஆப் மூலமும் கோhpக்கை விடுத்தனர். அதன் அடிப்படையில் இன்று மக்கள் நீதி மையம் கட்சியின் மாவட்ட தலைமை பொறுப்பாளர் சேகர் தலைமையில் கட்சி நிர்வாகிகள் மாவட்ட இனைச்செயலாளர் அலெக்ஸ், மாவட்ட துணைச்செயலாளர் நடராஜன், சேகர் மாநகர செயலாளர், சிவக்குமார் மாநகர பொறுப்பாளர், சத்யா சங்கர் ஒன்றிய பொறுப்பாளர், ஸ்ரீதர் ஒன்றிய செயலாளர், ஜவகர், ரத்தின ராஜா, பாலா, ரங்கநாதன், சுலைமான், பொன்ராஜ் பாக்கியராஜ், கணேஷ், ஆத்தி, செல்வம் மற்றும் தொண்டர்கள் 100 க்கும் மேற்ப்பட்டோர் கலந்து கொண்டு ஆகாயதாமரையை அப்புரபடுத்தும் பணியில் ஈடுபட்டனர். அவர்கள் செய்யும் பணியை ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் தாமஸ் அருள் பயஸ் பார்வையிட்டார்.


