செய்துங்கநல்லூர் சமுதாய நலக்கூடத்தில் கிராம உதயம் சார்பில் ஒரு நாள் பயிற்சி நடந்தது.
கிராம உதயம் சார்பில் அரசு பள்ளியில் கல்வி கற்பதால் ஏற்படும் பயன்கள் மற்றும் அரசு வழங்கும் உதவி திட்டங்கள் குறித்த ஒரு நாள் பயிற்சி நடந்தது. கிராம உதயம் இயக்குனர் மற்றும் நிறுவனர் டாக்டர் சுந்தரேசன் தலைமை தாங்கி பயிற்சியை துவக்கி வைத்தார். மேல ஆழ்வார் தோப்பு கிராம உதயம் கிளை அலுவலகம் வேல் முருகன் முன்னிலை வகித்தார். தன்னர்ர்வ தொண்டர் கண்ணன் வரவேற்றார்.
தனிஅலுவலர் இராமசந்திரன், தன்னார்வ தொண்டர்கள் ஆறுமுக வடிவு, பிரேமா, முத்துசெல்வன் செய்துங்கநல்லூர் மையத்தலைவிகள் நம்பித்தாய், சந்தன பேச்சி, சிங்நகர் மையத்தலைவி ஆறுமுககனி,எஸ்.என்.பட்டி மையத்தலைவி சண்முக சுந்தரி, குத்துக்கல் மையத்தலைவி பானுமதி, வி.எம். சத்திரம் மையத்தலைவி கனிமொழி ஆகியோர் கருத்துரை வழங்கினர். மேல ஆழ்வார் தோப்பு தன்னார்வ தொண்டர் ஆறுமுககனி நன்றி கூறினார். பயிற்சியில் கலந்துகொண்டவருக்கு கிராம உதயம் இயக்குனர் டாக்டர் சுந்தரேசன் சான்றிதழ் வழங்கினார்.


