தூத்துக்குடியில் பா. சிவந்தி ஆதித்தனார் 88வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது படத்திற்கு மாலை அணிவித்து அமைச்சர் கீதாஜீவன் மரியாதை செலுத்தினார்.
பா. சிவந்தி ஆதித்தனார் 88வது பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி வ.உ.சி சந்தை அருகே அவரது திருவுருவப் படத்திற்கு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும் – தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதாஜீவன் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
உடன் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ், பகுதிச் செயலாளர் சுரேஷ் குமார், பொதுக்குழு உறுப்பினர்கள் கோட்டு ராஜா, கஸ்தூரி தங்கம், மாவட்ட பிரதிநிதிகள் செல்வகுமார், நாராயணன், வட்டச் செயலாளர்கள் செல்வராஜ், சதீஷ், மாமன்ற உறுப்பினர் ஜெயசீலி, தொமுச நிர்வாகி மரியதாஸ், மாவட்ட மருத்துவரணி தலைவர் அருண்குமார், மாநகர இளைஞரணி அமைப்பாளர் அருண் சுந்தர், மாநகர மாணவரணி துணை அமைப்பாளர் சத்யா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன்
பத்மஸ்ரீ டாக்டர்.பா.சிவந்தி ஆதித்தனார் 88வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம், வீரபாண்டியன் பட்டினத்தில் உள்ள அவரது நினைவு மண்டபத்தில் உள்ள முழு உருவச்சிலைக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் மீன்வளம்-மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தலைமையில் இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, திருச்செந்தூர் நகராட்சி தலைவர் சிவ ஆனந்தி, நகராட்சி துணை தலைவர் ஏ.பி.ரமேஷ், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அறங்காவலர் அருள் முருகன் உட்பட பலர் கலந்து காெண்டனர்.
சமத்துவ மக்கள் கழகம்
தூத்துக்குடி வ.உ.சி மார்க்கெட் பகுதியில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப் படத்திற்கு தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் சார்பில் மாவட்ட செயலாளர் மாலைசூடி அற்புதராஜ் தலைமையில் மாவட்ட அவை தலைவர் கண்டிவேல் மாவட்டத் துணைச் செயலாளர்கள் சூசைமுத்து, அருள்ராஜ் மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் வக்கீல் சகாயராஜ் மாவட்ட வர்த்தக அணி செயலாளர் சிவசு முத்துக்குமார் மாவட்ட தொண்டர் அணி செயலாளர் முத்து செல்வம் மாநகர செயலாளர் உதயசூரியன் மாநகர அவை தலைவர் மதியழகன் உட்பட பலர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


