தூத்துக்குடி காரப்பேட்டை நாடார் தொடக்கப்பள்ளி வளாகத்தில் தமிழ் இலக்கியப் பேரவை 268 வது நிகழ்வு நடைபெற்றது.
தமிழ் இலக்கியப் பேரவை துணைத் தலைவர் செய்யது முகமது ஷெரீப் வரவேற்புரை ஆற்றினார். பேரவை தலைவர் துரை கணேசன் தலைமை வகித்தார். மீன் வளக்கல்லூரி பேராசிரியர் நீதிச்செல்வன், கவிஞர் கண்ணதாசனின் திரை இசைப்பாடல்களில் நவரசங்கள் என்ற தலைப்பில் பேசினார்.
கோவில்பட்டி திருவள்ளுவர் மன்றச் செயலாளர் நம். சீனிவாசன் சங்க இலக்கியச் சாரலில் நயம் தரும் நற்றிணை என்ற தலைப்பில் பேசினார். செயலர் ஆதி அருமைநாயகம் கூட்ட அறிக்கை வாசித்தார். பேரவை புரவலர் பழரசம் விநாயகமூர்த்தி வாழ்த்துரை வழங்கினார். திருக்குறளார் தனபாலன், கவிஞர் ஐடாஸ்ரீ சவரிமுத்து, பேராசிரியர் முரளி, முத்தமிழ் மன்றம் முருகேசன், ஆசிரியர் பொன்னையா, பாவலர் இளமுருகு, குமரேசன், உட்பட பலர் கலந்து கொண்டனர். ஆசிரியர் பூபால் செல்லையா நன்றியுரையாற்றினார்.


