தாதன்குளத்தில் அப்போஸ்தல கிறிஸ்தவ சபை சார்பில் நற்செய்தி கூட்டங்கள் நடந்தது.
மூன்று நாள்கள் நடந்த கூட்டத்திற்கு கண்மலை ஜெப மையம் தலைமை போதகர் மரியதாஸ் தலைமை வகித்தார். தூத்துக்குடி குட் நியூஸ் மிஷன் சர்ச் தேவ செய்தியாளர் சாமுவேல் மோசஸ், வாலத்தூர் கிருபாசனம் கிறிஸ்துவின் சபை சால்வின்குழுவினரின் பாடல் துதி ஆராதனை நடந்தது. மதபோதகர் அம்பலசேரி பால்ராஜ்,ஆலன்கிணறு ஜான்சன், நாகல்குளம் செல்வராஜ், கருங்குளம் ஜோசப் சாமுவேல், ஆறாம்பண்ணை அரபாத்நகர் ஜெயபால் உள்பட பலர் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை தாதன்குளம் அப்போஸ்தல கிறிஸ்தவ சபையின் சார்பில் கண்மலை ஜெபமைய தலைமை போதகர் மரியதாஸ் தலைமையில் விசுவாசிகள் செய்திருந்தனர்.


