தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் கிளை சார்பாக போதை ஒழிப்பு பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது நிகழ்ச்சியில் கிளை தலைவர் சாதிக் தலைமை தாங்கினார். செயலாளர் அப்துல் காதர் முன்னிலை வகித்தார் இப்பேரணி அல் மஸ்ஜிதுன் நூர் பழைய பள்ளிவாசலில் இருந்து தொடங்கியது
முஸ்லிம் புதுத்தெரு வழியாக வந்து செய்துங்கநல்லூர் பஸ் நிலையத்தை வந்து அடைந்தது அங்கு போதை மதுவுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன இதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாநில பேச்சாளர் உசாமா போதைக்கு எதிராக கண்டன உரை நிகழ்த்தினார்
இதில் பூரணம் மதுவிலக்கு அமல்படுத்தவும் 2.செய்துங்கநல்லூரில் பெருகிவரும் நாய்களை கட்டுப்படுத்தவும்
3.பாலக்காடு டு திருச்செந்தூர், திருச்செந்தூர் டு பாலக்காடு ரயிலை செய்துங்கநல்லூர் ரயில் நிலையத்தில் நின்று செல்ல வலியுறுத்தியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் துணைச் செயலாளர் அப்துல் கனி தொண்டரணி செயலாளர் ஹனிபா மாணவர் அணி செயலாளர் நவ்ஃபல் மற்றும் ஆண்கள் பெண்கள் மற்றும் மதர்சா மாணவ மாணவிகள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இறுதியாக துணைத்தலைவர் வாசிம் நன்றியுரை கூறினார்


