திரேஸ்புரம் கடற்கரையை ஒட்டியுள்ள குடியிருப்பு பகுதிகளில் சொந்த நிதியில் கழிவுநீர் கால்வாய் தூர்வாரும் பணியை அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி மாநகராட்சி 8வது வார்டுக்கு உட்பட்ட திரேஸ்புரம் கடற்கரையை ஒட்டியுள்ள குடியிருப்பு பகுதிகளில் கழிவுநீர் கால்வாய் தூர்வாரும் பணியை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதாஜீவன் தனது சொந்த செலவில் துவக்கி வைத்து பார்வையிட்டார். உடன் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாநகராட்சி வடக்கு மண்டல தலைவர் நிர்மல்ராஜ், மாமன்ற உறுப்பினர் பவானி மார்ஷல், வட்டச் செயலாளர் ரவிச்சந்திரன், வட்டச் பிரதிநிதிகள் அமாலுதீன், ஆறுமுகம், மார்ஷல் உள்ளிட்டோர்.


