தூத்துக்குடி மேலசண்முகபுரம் முனியசாமி கோவில் கொடை விழா போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் கீதாஜீவன் பாிசு வழங்கினார்.
தூத்துக்குடி மேலசண்முகபுரம் முனியசாமி கோவிலில் கொடை விழா கடந்த 26ம் தேதி கால்நட்டு விழாவுடன் தொடங்கியது. விழாவில் தினமும் இரவு சுவாமிக்கு சிறப்பு அலங்காரத்துடன் சிறப்பு பூஜையும் நடைபெற்றது. 8ம் நாள் திருவிழால் கோவில் கொடைவிழாவையொட்டி பல்வேறு போட்டிகள் நடைபெற்றது.
விழாவில் சிறப்பு விருந்தினராக சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பாிசு வழங்கினார். விழாவில் திமுக மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், வட்டச்செயலாளர் சுரேஷ், வட்டப் பிரதிநிதிகள் சண்முகையா, மதியழகன், பாஸ்கா், தொழிலதிபா் விஜயராஜ், மற்றும் மணி, அல்பட், கோவில் நிர்வாகிகள் பக்தர்கள் கலந்து கொண்டனர்.


