1847 – லைபீரியா ஐக்கிய அமெரிக்காவிடம் இருந்து விடுதலை பெற்றது.
1848 – மாத்தளை கிளர்ச்சி: இலங்கையில் பிரித்தானியருக்கு எதிராக வீரபுரன் அப்பு தலைமையில் கிளர்ச்சி வெடித்தது. வீரபுரன் அப்பு கைது செய்யப்பட்டு ஆகஸ்ட் 8 இல் தூக்கிலிடப்பட்டான்.
1891 – தாகித்தி பிரான்சுடன் இணைந்தது.
1936 – அச்சு நாடுகள் எசுப்பானிய உள்நாட்டுப் போரில் தலையிட முடிவு செய்தன.
1944 – இரண்டாம் உலகப் போர்: சோவியத் இராணுவம் உக்ரைனின் லிவீவ் நகரை நாசிகளிடம் இருந்து கைப்பற்றினர். அந்நகரில் இருந்த 160,000 யூதர்களில் 300 பேர் மட்டுமே எஞ்சியிருந்தனர்.
1944 – இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியின் முதலாவது வி-2 ஏவுகணை பிரித்தானியாவைத் தாக்கியது.
1945 – இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியின் போட்ஸ்டாம் என்ற இடத்தில் சோவியத் ஒன்றியம், அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம் ஆகிவற்றிற்கிடையில் போட்ஸ்டாம் உடன்பாடு எட்டப்பட்டது.
1945 – ஹிரோசிமாவில் போடப்படவிருந்த அணுகுண்டைத் தாங்கியவண்ணம் இண்டியானாபொலிஸ் என்ற அமெரிக்கக் கடற்படைக் கப்பல் டினியான் தீவை அடைந்தது.
1945 – ஐக்கிய இராச்சிய நாடாளுமன்றத் தேர்தலில் தொழிற் கட்சி வெற்றி பெற்றது. வின்ஸ்டன் சர்ச்சில் பதவி இழந்தார்.
1952 – எகிப்தில் நிகழ்ந்த இராணுவப் புரட்சியில் மன்னர் பாரூக் பதவியில் இருந்து அகற்றப்பட்டு அவரது ஆறு மாதங்கள் அகவையுடைய மகன் இரண்டாம் புவாட் மன்னன் ஆக்கப்பட்டான்.
1953 – கியூபா பூரட்சி: கியூபாவில் மொன்காடா இராணுவத் தளம் மீது பிடெல் காஸ்ட்ரோ தலைமையில் புரட்சியாளர்கள் மேற்கொண்ட தாக்குதல் முறியடிக்கப்பட்டது.
1956 – அஸ்வான் அணைக்கட்டுக்கு உலக வங்கி நிதி உதவி வழங்க மறுத்ததை அடுத்து சூயஸ் கால்வாயை எகிப்திய அதிபர் கமால் அப்துல் நாசர் அரசுடமை ஆக்கினார்.
1957 – குவாத்தமாலாவின் சர்வாதிகாரி கார்லொஸ் அர்மாஸ் கொல்லப்பட்டார்.
1957 – இலங்கைப் பிரதமர் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்காவுக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைவர் எஸ். ஜே. வி. செல்வநாயகம் அவர்களுக்கும் இடையே ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
1958 – எக்ஸ்புளோரர் 4 ஏவப்பட்டது.
1963 – மசிடோனியாவில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 1,100 பேர் வரை கொல்லப்பட்டனர்.
1965 – மாலைதீவுகள் ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து முழுமையாக விடுதலை பெற்றது.
1971 – அப்பல்லோ 15 விண்கலம் ஏவப்பட்டது.
1974 – ஏழாண்டுகள் இராணுவ ஆட்சியின் பின்னர் கிரேக்கத்தில் மக்களாட்சி ஏற்பட்டது.
1994 – எஸ்தோனியாவில் இருந்து ரஷ்யப் படைகளை வெளியேற்ற அதிபர் பொரிஸ் யெல்ட்சின் முடிவெடுத்தார்.
2005 – டிஸ்கவரி விண்ணோடம் ஏவப்பட்டது.


